சீமான் VS விஜய்: 2026 சட்டமன்றத்தேர்தலில் இதுதான் நடக்கும்… அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன விஷயம்..!!

By Soundarya on புரட்டாதி 15, 2025

Spread the love

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். திமுக அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சித்து வருகிறது. அதேபோல விட்ட ஆட்சியை மீண்டும் எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று அதிமுக முனைப்போடு ஈடுபட்டு வருகிறது. அதிமுகவில் இரண்டு பிளவுகள் இருந்தாலும் எடப்பாடி கடுமையாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கி 2026 இல் முதல்வர் பதவியை பிடிப்பதற்காக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல சீமானும் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனியாக களமிறங்கி உள்ளார் . இந்த நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஐ பெரியசாமி, 2026 சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை சீமானுக்கும், விஜய்க்கும் தான் போட்டி. இருவரும் மூன்றாவது இடத்திற்கு முயற்சிக்கிறார்கள். இவர்களால் ஒரு இடம் கூட வெல்ல முடியாது” என்று பேசி உள்ளார்.