நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது 2020 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். தன்னுடைய கரியரின் உச்சத்தையும் வருமானத்தையும் உதறி தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்ததாக கூறியிருந்தார். இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான் விஜயை ஒருமையில் பேசி விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், ” என்னுடைய தம்பியை கரியரின் உச்சத்தையும் வருமானத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வர சொன்னது யார்? உன் வீட்டு வாசல்ல எவன்டா நின்னான்? நீ வா என்று யாரும் கூப்பிடவில்லையே. எதுக்கு வர்ற? அஜித்தும், ரஜினியும் தன்னுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை.
தமிழக வெற்றிக்கழகம் தற்குறிகளால் நிறைந்துள்ளது. தமிழ், தமிழர்கள், தமிழர்கள் உரிமை வளங்கள் என்ற ஒரு வார்த்தையாவது அவர் பேசியிருக்கிறாரா? அனைவரும் ஒன்று என்றால் கட்சி ஆந்திராவில் ஆரம்பிக்க வேண்டியதானே? ஒன்றரை மணி நேரம் ஆனாலும் எம்ஜிஆர் எழுதி வைக்காமல் பேசுவார். விஜயகாந்த் மக்களின் மொழியிலேயே பேசுவார் .ஸ்டாலின் கூட சின்ன சீட்டில் எழுதி வைத்து தான் பேசுவார். என் தம்பியும், எடப்பாடியும் முழு சீட்டு வைத்து பேசுவார்கள். இவரால் மழையில் பேச முடியாது காகிதம் நனைந்து விடும். என் தம்பி பேசுறாரு பாருங்க.. சாத்தியம் இல்லாததை நாங்கள் பேச மாட்டோம்னு.. வேற எதை பேசுவ?.. தெலுங்கு படத்துல பாலகிருஷ்ணா வசனம் பேசுற மாதிரி பார்த்து படிச்சிட்டு இருக்காரு. அரைபைத்தியத்தை எல்லாம் தலைவணாக்கி வெச்சுருக்கீங்க… இவ்ளோ நாள் ஒரு வார்த்தையாச்சும் இதை பத்தி பேசுனீயா? என்று பேசியுள்ளார்.
