தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. அனைத்து கட்சியும் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டு வரும் நிலையில் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த நிலையில் இன்று திருச்சியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான சுப்பிரமணிய சிவா சிரஞ்சீவி, கமலுடன் தவெக தலைவர் விஜய்யை ஒப்பிட்டு விமர்சனம் செய்வது நல்லது அல்ல என்று அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.
பல ஊர்களுக்கு சென்று வருவதன் அடிப்படையில் அழுத்தமாக சொல்கிறேன்;.விஜய்யை யாரும் சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். வரலாற்றின் வேலை துணிந்தவனை தலைவனாக்குவது தான் . விஜய் வரவு அரசியலில் ஒரு அதிர்வு என்பதே உண்மை என்று தெரிவித்துள்ளார்.
