செங்கோட்டையனின் அடுத்தகட்ட நடவடிக்கை…. தமிழக அரசியலில் நடக்கக்போகும் மாற்றம்…!!

By Soundarya on புரட்டாதி 13, 2025

Spread the love

சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க இபிஎஸ்-க்கு கெடு விதித்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனால் அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதேசமயம் செங்கோட்டையனின் அடுத்த நகர்வு என்ன என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. சமீபத்தில் அமித்ஷாவை அவர் டெல்லியில் சந்தித்து பேசியதாக கூறி இருந்தார்.

இந்நிலையில்  தனது அடுத்த கட்ட நடவடிக்கை செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட  அவர்  டெல்லிக்கு சென்று திரும்பிய நிலையில், அவரது அடுத்தக்கட்ட நகர்வை எல்லோரும் ஊற்று நோக்குகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து  பேசிய அவர், எல்லோரும் நினைப்பது போல நல்லதையே நினைத்து நல்லதேயே செய்வோம்.  அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் உள்ளது எனவும் கூறியுள்ளார்.