திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் டிரைவர் போன் பேசிக்கொண்டு பஸ்ஸை இயக்கியுள்ளார். அந்த பஸ்ஸில் இருந்த ஒருவர் வீடியோவை எடுத்து பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலாகி பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தமிழக போக்குவரத்து துறை பாதுகாப்பான பயணத்தையும் மேற்கொண்டு வரும் சூழலில் இது போன்ற நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எவ்வளவுதான் உத்தரவுகள் போட்டாலும் சிலர் இது போன்ற செயல்களை ஈடுபட்டு தான் வருகிறார்கள். டிரைவர்கள் போன் பேசிக்கொண்டு பஸ்ஸை இயக்குவது போன்ற வீடியோ இணையதளத்தில் நிறையவே உள்ளது. இந்த வீடியோவில் இருந்த டிரைவரை உரிய நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது. சில சமயம் குடிபோதையில் கூட டிரைவர்கள் பஸ்ஸை இயக்குவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதுபோல சில டிரைவர்களின் அலட்சியத்தினாலே பெரிய விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்து கழகத்தில் போன் பேசிக்கொண்டு பஸ்ஸில் இயக்கினால் 29 நாள் பணி நீக்கம் என்று தெரிந்துமே இது போன்ற செயலில் பலரும் ஈடுபட்டு தான் வருகிறார்கள்.
