“யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்” ரயிலில் இனிப்பு விற்கும் முதிய தம்பதி… நடிகர் ராகவா லாரன்ஸ் முக்கிய வேண்டுகோள்…!!

By Soundarya on புரட்டாதி 12, 2025

Spread the love

நடிகர், இயக்குனர் மற்றும் நடன கலைஞர் என பன்முக திறமை கொண்ட ராகவா லாரன்ஸ் பலருக்கும் உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் ரயில்களில் இனிப்பு விற்கும் வயது முதிர்ந்த தம்பதிகள் குறித்து அறிந்து அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், “சென்னையில் 80 வயது முதியவரும் அவருடைய மனைவியும் இனிப்பு தயாரித்து ரயில்களில் விற்பனை செய்வதை நான் அறிந்தேன்.

அவர்களுக்கு ஒரு லட்சம் நன்கடை கொடுக்க தயாராக உள்ளேன். முதியவர்கள் காண்பித்திருக்கும் செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் பற்றி விவரம் தெரிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.