சார்ஜ் போட்ட சிறுமி… உடல் முழுவதும் தொட்டு ரசித்த கிளீனர்… ஓடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Divyamayakannan on புரட்டாதி 12, 2025

Spread the love

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஒரு தம்பதிக்கு 16 வயதிலும் மகள் உள்ளார். அந்தச் சிறுமி ஹைதராபாத்தில் வசிக்கும் அக்காவின் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் பெங்களூரு திரும்பி உள்ளார். தனியார் பஸ்ஸில் தனியாக சிறுமி வந்ததை கண்டு கிளீனர் ஜன்னலை மூடுவது போல சிறுமியின் உடல் மீது தொட்டு தடவி உள்ளான். இதைப் பற்றி அந்த சிறுமி போனில் தாயாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்பு போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆனதால் டிரைவரிடம் கொடுத்து சார்ஜ் போட்டுள்ளார். சிறுது நேரம் கழித்து போனை எடுக்கச் சென்றபோது கிளீனர் எனக்கு முத்தம் கொடுத்தால் மட்டுமே ஃபோனை தருவேன் என்று கட்டாயப்படுத்தி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளான்.

சிறுமி போனை புடுங்கி கொண்டு இந்த சம்பவத்தை அண்ணனிடம் கூறியுள்ளார். அண்ணன் உடனே உறவினர்களோடு புறப்பட்டு சாளுக்கிய சர்க்கிளுக்கு திரண்டு வந்துள்ளார். தங்கை வந்து கொண்டிருந்த தனியார் பஸ் வந்தவுடன் கிளீனரை சுற்றி வளைத்து நடுரோட்டில் ஆடையை கிழித்து நிர்வாணப்படுத்தி சிறுமியின் குடும்பத்தினர் தர்ம அடி கொடுத்தனர். சுற்றி இருந்தோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அவனை கைது செய்து விசாரித்ததில் அவனுடைய பெயர் ஆரிப் கான் என தெரியவந்துள்ளது. போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுச்செய்து கைது செய்துள்ளனர். பஸ்ஸில் வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவம் பஸ்ஸில் நடந்த போதும் டிரைவர் அமைதியாக இருந்து உள்ளார் என சிறுமியின் அண்ணன் குற்றம் சாட்டி உள்ளார்.