பிரிட்டனைச் சேர்ந்த டேனி என்ற நபர் தன்னுடைய காதலியை 10 வருடங்கள் ஏமாற்றி ஒரே நேரத்தில் ஆறு வெவ்வேறு பெண்களோடு உறவில் இருந்து வந்துள்ளார். இதை காதலியிடம் இருந்து மறைப்பதற்கு வண்ண குறியீடு கொண்ட காலண்டர்கள், மூன்று தொலைபேசிகள் மற்றும் ஒரு கிளியை பயன்படுத்தினார். 38 வயதான அவர் தன்னுடைய அனைத்து தோழிகளையும் நிர்வகிக்க வண்ண குறியீடு கொண்ட காலண்டரை பயன்படுத்தினார். இதில் எந்த நாளில் எந்த பெண்ணை சந்திக்க வேண்டும் என்பதை அந்த வண்ணங்கள் தீர்மானித்தனவாம். அதே நேரத்தில் தன்னுடைய காதலியின் கவனத்தை அவருடைய தொலைபேசியில் இருந்து திசை திருப்ப கிளிக்கு ஒரு பயிற்சி கொடுத்திருந்தார்.
தொலைபேசியில் அறிவிப்பு வரும்போதெல்லாம் கிளி விசித்திரமான ஒலியை எழுப்ப தொடங்கியது. இது பெண்ணின் கவனத்தை தொலைபேசியில் இருந்து கிளியின் பக்கம் திருப்பும் என்பதற்காகவாம். மேலும் அவர் மூன்று செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளார். ஒன்று சாதாரண அழைப்புகளுக்கு, மற்ற இரண்டு செல்போன்கள் மறைத்து வைத்திருந்தார். இப்படி கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வந்த நிலையில் நாய் அதை முழுவதுமாக அம்பலப்படுத்தி உள்ளது.
அவருடைய காதலியை ஒருவருக்கு நாய் ஒன்று இருந்தது . இந்நிலையில் அவர் தன்னுடைய முதல் காதலியிடம் இருந்து திரும்பிய போது நாயின் மூடியின் ஒரு பகுதி அவருடைய சட்டையில் ஒட்டிக்கொண்டது. ஆனால் காதலிக்கு நாய்கள் பிடிக்காததால் அதன் மீது சந்தேகப்பட்டு சரமாரியாக கேள்வியை எழுப்பி உள்ளார். அதன் பிறகு தான் அவருடைய பொய் அம்பலமாகி தெரிய வந்தது.
