உங்கள் வீட்டில் உள்ள மல்லி பூ செடியில் பூ, பூக்க மாட்டேங்குதா? இதை மட்டும் செய்யுங்கள் கண்டிப்பாக கொத்துக்கொத்தாக பூ பூக்கும். விலை உயர்ந்த ரசாயன உரங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் உள்ள பழைய சோறை வைத்தே பூக்க வைக்க முடியும். மல்லி பூச்செடிக்கு உரம் போடும் போது சூரிய ஒளியில் செடி இருக்க வேண்டியது அவசியம் மற்றும் நுனிகளை வெட்டி விட வேண்டும். அப்போதுதான் செடி தலைத்து வர ஆரம்பிக்கும்.
நுனிகளை வெட்டிய பின் ஒரு வாரத்திற்குப் பிறகுதான் உரம் போட வேண்டும். செடி இருக்கும் இடத்தில் சுற்றி உள்ள களைகளை பிடுங்கி விட்டு மண்ணை லேசாக கிளறி விடுங்கள். பின்பு ஆட்டு எரு உரங்களை போட வேண்டும், அடுத்ததாக வீட்டில் உள்ள பழைய சோற்றை ஊறவைத்து அதனுடைய தண்ணீரை மற்றும் ஊற்ற வேண்டும். இப்படி செய்தால் மல்லிகைச் செடியில் பூ கொத்து கொத்தாக பூத்துக் குலுங்கும்.
