தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சில கட்சிகள் கூட்டணியை அமைத்துவிட்டு வெற்றி வாகை சூடுவதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு சில கட்சிகள் மட்டும் இன்னும் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகின்றன. அந்தப் பட்டியலில் தேமுதிகவும் இடம்பெற்றுள்ளது. இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் வெளியிடவில்லை.
இந்நிலையில் 2026 தேர்தலில் தான் செய்ய உள்ள மேஜிக், கட்சியினர் அனைவரையும் வெற்றி பெற செய்யும் என பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா பேசியுள்ளார். கட்சியை நம்பி வந்த நிர்வாகிகளை அரசு பதவிகளில் கெத்தாக பார்க்க வேண்டும் என்று கூறிய அவர், பூத் கமிட்டியை முறையாக அமைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஜனவரியில் கடலூர் மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
