வாட் ப்ரோ? சனிக்கிழமை மட்டும் வேலை… மற்ற நாளில் Work From Home… இது என்ன லாஜிக் விஜய்… வெளுத்து வாங்கிய அண்ணாமலை..!

By Nanthini on புரட்டாதி 9, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் இறங்கியுள்ளன. அதன்படி தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தன்னுடைய முதல் சுற்று பயணத்தை இன்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை விஜயின் சுற்றுப்பயணம் குறித்து பேசி உள்ளார்.

அதில், திமுக அரசுக்கு எதிரான மனநிலை தற்போது இல்லை என்று நான் கூறவில்லை. மக்களின் எதிர்ப்பு அலை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தான் தெரியவரும். எதிர்ப்பு அலை இருக்கிறது அல்லது இல்லை என தற்போது கூறுவது தேவையில்லை. மாற்று சக்தி என்று கூறும் TVK 24 மணி நேரமும் மக்களுக்காக இருக்க வேண்டும். மக்களும் அதை தான் எதிர்பார்க்கிறார்கள். சனிக்கிழமை மட்டும் தான் மக்களை பார்ப்பேன் என நினைக்கிறார் விஜய். அவர் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும்.

   

சனிக்கிழமை மட்டும் மக்களை சந்திப்பேன், மற்ற நாட்களில் வீட்டிலிருந்து work from home அரசியல் செய்வேன் என்றால் மக்கள் சீரியஸான அரசியலாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சனிக்கிழமையில் மட்டும் பிரச்சாரம் செய்வேன், திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் வேலை செய்ய மாட்டேன் என்று விஜய் கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்று அண்ணாமலை கூறியுள்ளார்