இன்று நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் NDA வேட்பாளரான சிபி ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றுள்ளார். காலை தொடங்கிய துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 782 எம்பிக்களில் 767 பேர் வாக்களித்திருந்தார்கள்.
இதனையடுத்து, மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு NDA வேட்பாளரான சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக துணை ஜனாதிபதியான சிபி ராதாகிருஷ்ணன் ராஜ்யசபா தலைவராகவும் செயல்படவுள்ளார்
