தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், TVK கட்சியின் மீது மக்களிடையே பெருகிவரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக் கொள்ள முடியாத விளம்பர மாடல் திமுக அரசு அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது . மக்களுடைய செல்வாக்கை இழந்த இந்த ஆளும் கட்சியானது யாருக்கு பயப்படுகிறதோ, இல்லையோ தமிழக வெற்றி கழகத்தை கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.
இது வெற்று விளம்பரம் மாடல் அரசு. தமிழக வெற்றிக்கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளை கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களுடைய தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
