சென்னை அண்ணா நகரை சேர்ந்த நவீன் (19). தாம்பரம் அடுத்த படப்பை நோக்கி நவீன் மற்றும் இவருடைய தோழி அபிமணியும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். சாலையில் மாடு ஒன்று சுற்றிக் கொண்டு இருந்துள்ளது. திடீரென்று அந்த மாடு நவீனின் பைக்கின் குறுக்கே வந்ததால் மாட்டின் மீது மோதி நிலை தடுமாறி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனிடையே எதிரதிரே வந்த கார்களும் இருவர் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திலேயே நவீன் மற்றும் தோழி அபிமணி இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தோழியுடன் சென்ற நவீன் உயிரிழந்தது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
