அடுத்த பரபரப்பு… காங்கிரசுக்கு 125 சீட், 125 தொகுதிகளில் போட்டி?… திமுக கூட்டணியில் விரிசல்… செம அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின்…!

By Nanthini on புரட்டாதி 8, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் EPS பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் தனக்கு எதிராக திரும்பும் முக்கிய நிர்வாகிகளை கட்சியிலிருந்து இபிஎஸ் அடியோடு நீக்கி வருகின்றார். சமீபத்தில் கூட மூத்த நிர்வாகியை செங்கோட்டையனை அதிரடியாக நீக்கி இருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது கூட்டணியை பலமாக வைத்துள்ள திமுக இந்த முறையும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலைபாட்டோடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 117 சட்டமன்ற தொகுதிகளை குறி வைத்து நாம் பணியாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளதால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

   

நெல்லையில் நடைபெற்ற வாக்கு திருட்டு விழிப்புணர்வு மாநாட்டில் பேசிய அவர், தமிழக காங்கிரஸ் 2026 இல் சுமார் 125 இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என கூறியுள்ளார். 2021 தேர்தலில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.