நடிகை நவ்யா நாயர் ஆஸ்திரேலியாவுக்கு மல்லிகை பூ எடுத்துச் சென்றதால் அந்நாட்டு அதிகாரிகள் அவருக்கு 1.14 லட்சம் அபராதம் விதித்துள்ளார். மலையாள நடிகை நவ்யா நாயர் விக்டோரியா மலையாள சங்கத்தினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது தன்னுடைய கைப்பையில் 15 சென்டிமீட்டர் நீளம் உள்ள மளிகை பூ வைத்திருந்ததால் அவருக்கு 1.14 லட்சம் ரூபாய் அபராதத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விதித்துள்ளார்கள். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது, “நான் ஆஸ்திரேலியா புறப்படும் போது என்னுடைய தந்தை எனக்கு மல்லிகை பூவுக்கு வாங்கி கொடுத்தார்.
அதை இரண்டாகப் பிரித்து கொச் -சி சிங்கப்பூர் பயணத்தின் போது ஒன்றை தலையில் வைத்துக் கொண்டேன். மற்றொன்று என்னுடைய கைப்பையில் வைத்திருந்தேன். மெல்ஃபோனில் அதை வைத்திருந்ததற்காக அபராதம் விதித்தார்கள். சட்டத்திற்கு எதிராக நான் தவறு செய்து விட்டேன். இதை நான் வேண்டுமென்றே செய்யவில்லை தவறு தவறுதான். 28 நாட்களுக்குள் அபராதம் செலுத்த கூறியுள்ளார்கள் என்று கூறியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து பரவும் நோய்களை தடுப்பதற்காக ஆஸ்திரேலியாவில் மிகவும் கடினமான பல்லுயிர் பாதுகாப்பு விதிகள் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
