“யாருமே சம்மதிக்கல” 10-ம் வகுப்பு மாணவியை காதலித்த 22 வயது இளைஞர்… பெற்றோர் எதிர்ப்பால் அடுத்து நடந்த புயங்கரம்..!!

By Soundarya on புரட்டாதி 7, 2025

Spread the love

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆலங்குளம் அருகே உள்ள டி.கரிசல் குளம் கிராமத்தில் வசித்தவர் ஈஸ்வரராஜா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் இறந்துவிட்டார். இளைய மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் மகன் ஆகாஷ் (22 ) என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய காதலுக்கு இருவரும் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள்.

இதனால் அந்த மாணவியும், ஆகாஷ் மனவருத்தம் அடைந்துள்ளார்கள். இந்த நிலையில் நேற்று மாணவி மட்டும் வீட்டில் இருந்த நிலையில் இது குறித்து அறிந்து வீட்டிற்கு வந்த ஆகாஷ் வெகுநேரமாக அவரோடு  பேசிக்கொண்டிருந்தார். பிறகு இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.