தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி(58) இவர் கவிதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு வர்ஷினி ஹன்சிகா என இரு மகள்கள் உள்ளனர். ஹன்சிகாவுக்கு திருமணம் ஆகி வெளியூரில் அவர் கணவருடன் வசித்து வருகிறார். மூத்த மகள் வர்ஷினி தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் , கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குமாரசாமிக்கு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கினார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் கவிதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விஷயம் குமாரசாமிக்கு தெரிய வர இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தன் கணவரை போட்டுத் தள்ள நினைத்த கவிதா கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி யாரும் இல்லாத பொழுது ராஜகுமாரை தனது வீட்டிற்கு வரவழைத்தார் பின் கவிதா தன் கணவரின் கால்களை பிடித்துக் கொண்டார் ராஜ்குமார் குமாரசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். தன் கணவர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக நாடகமாடி குமாரசாமி உடலை நல்லடக்கம் செய்தார்.
தனது தந்தை இறப்பு குறித்து தொடர்ந்து கேள்வி கேட்டுள்ள வர்ஷினியை ராஜ்குமாருடன் சேர்ந்து கடந்த மாதம் இரண்டாம் தேதி திட்டமிட்டு கொலை செய்தார். பின் மகளின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பின்புறம் வீசி சென்றார். மேலும் தனது மகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் இந்நிலையில் ராஜ்குமார் கடந்த மாதம் 25ஆம் தேதி வர்ஷினியின் உடலை எடுத்துக்கொண்டு தேசிய நெடுஞ்சாலை சென்றுள்ளார். அங்கே ஒரு ஓரமாக பிணத்தை வைத்து அதன் மீது மஞ்சள் குங்குமம் இட்டு பூக்களை தூவினார். மேலும் பல அணிகளை அடித்து அமானுஷ்ய சடங்கு நடப்பது போல சித்தரித்து வர்ஷினியின் உடல் அருகே அவர் ஆதார் கார்டை வீசி சென்றார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வர்ஷணியின் பிணத்தை கைப்பற்றி கவிதாக்கு தொடர்பு கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கவிதா தனது மகளை யாரோ கொலை செய்து விட்டதாக கதறி அழுது நாடகம் ஆடினார். கவிதாவின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது மேலும் போலீசாரின் கிடக்குபிடி விசாரணையில் கவிதா தனது காதலனுடன் சேர்ந்து கணவனையும் மகளையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
