அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE), பொரியல் பட்டதாரி திறனறித் தேர்வு (GATE) அல்லது வடிவமைப்புக்கான பொது நுழைவு தேர்வு (CEED) ஆகியவற்றின் ஸ்கோர் அடிப்படையில் தகுதியுள்ள மாணவர்களுக்கு முதுகலை உதவித்தொகையை [ME/M.Tech./M.Arch. (GATE-க்கு) மற்றும் M.Des. (CEED-க்கு)]வழங்கி வருகிறது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட முதுகலை படிப்புகளில் சேர விரும்பும் முழு நேர மாணவர்களுக்கு, இந்த உதவித்தொகை கிடைக்கும்.
நிதி உதவி : மாதத்திற்கு ரூ. 12,400. இந்த உதவித்தொகை 24 மாதங்களுக்கு வழங்கப்படும்.
தகுதி
- GATE /CEED மதிப்பெண் பொருத்து AICTE அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் முழு நேர மாணவராக இருத்தல் வேண்டும்.
- ஆதார்- சீட் சேமிப்பு கணக்கு வைத்திருத்தல் வேண்டும்
- பிற நிதி உதவி பெறாது/வெளிநாட்டு நிதியுதவி பெற்று / மேலாண்மை ஒதுக்கீட்டு மாணவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
AICTE PG இன் அதிகார ப் பூர்வ இணையதளத்திற்குச் சென்று மாணவர்கள் தங்கள் சுய விவரங்களை பதிவேற்றி இந்தத் திட்டத்திற்கு அப்ளை செய்யலாம்.
உதவித்தொகை புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு
- உதவித்தொகையைத் தொடர்ந்து பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 75 சதவீதம் வருகை பதிவு வைத்திருக்க வேண்டும்
- மேலும் திருப்திகரமான கல்வி திறனையும் பராமரிக்க வேண்டும்
- அவர்கள் வேலையில் சேர தடை விதித்துள்ளது
- தவறான நடத்தையும் தவிர்க்க வேண்டும்
