உத்திரபிரதேச மாநிலம் ஜகதீஷ்புராவின் மாருதி எஸ்டேட்டில் உள்ள பெட்ரோல் பம்பில் புதன்கிழமை காலை தனது மகன் தங்கள் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக காத்திருந்தபோது முன்னி தேவி என்ற 60 வயது பெண் ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்தார். அதாவது இவர் தனது மகன் லலித்துடன் காலை 10 மணியளவில் ஹனுமான் நகரில் உள்ள தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள எஸ்ஸார் பெட்ரோல் பம்பிற்குச் சென்றுள்ளார்கள்.
आगरा के मारुति स्टेट चौराहा स्थित पेट्रोल पम्प पर महिला को कार ने कुचला, मौक़े पर दर्दनाक मौत!
बेटे के साथ दोपहिया वाहन पेट्रोल डलवाने गई थीं
पूरी घटना सीसीटीवी कैमरे में हुई कैद ! pic.twitter.com/rAg9sJX4jD— Rahul Chaudhary (@rchaudhary_) September 4, 2025
அப்போது லலித் மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்ப வரிசையில் நின்றார். அப்போது அவரது தாயார் பெட்ரோல் பம்ப் அருகே தரையில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்த ஒரு கார் திடீரென வேகமாக முன்னேறி, முன்னி தேவியின் மீது மோதி, அதன் முன் சக்கரங்கள் அவர் மீது மோதியது. இதனை பார்த்தவர்கள் அலறல் சத்தம் கேட்டதும் கார் ஓட்டுநர் முதலில் காரை நிறுத்தினார். இதனையடுத்து லலித் தனது தாயாரை அதே வாகனத்தில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
