தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை, வீர செயல்களை புரிந்த இளம் பெண் குழந்தைகளுக்கு மாநில அளவிலான விருதை வழங்குகிறது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு அறிவிப்பின்படி, விருதை பெற தகுதியுடைய குழந்தைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்
- விண்ணப்பிக்கும் பெண் குழந்தைகள் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
- 13 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
- விண்ணப்பிப்பவர்கள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக போராடுதல், பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் போன்ற வீர செயல்களில் ஈடுபட்டவராக இருக்க வேண்டும்.
- ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலம் சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை தீர்வு காண விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும்
- ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்று கருதப்படும் துறைகளில் சாதனை புரிந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள் : நவம்பர் 29, 2025
விண்ணப்பிக்கும் முறை :
https://awards.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த படிவத்தின் இரண்டு நகல்களை பூர்த்தி செய்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
- சுயவிவரம்
- சுய சரிதை
- இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- வீர செயல்கள் பற்றிய குறிப்பு, அதற்கான ஆதாரங்கள், புகைப்படங்கள், செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் தொகுப்பு.
- மேலும் ஏதேனும் தேசிய அல்லது உலகளாவிய விருதுகள் பெற்று இருந்தால் அதன் சான்றுகளை இத்துடன் இணைக்க வேண்டும்.
மேலும் தொடர்புக்கு 04652-278404 என்ற தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம்.
