மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஜபல்பூரில் குடும்ப பிரச்சினை பெரிய சண்டையாக மாறியது பரபரப்பை கிளப்பியுள்ளது. அபிஷேக் சோன்கர் என்ற நபர் ஒருவர் தன்னுடைய முதல் மனைவி ப்ரீத்தி வான்ஸ்கரை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதல் மனைவி ப்ரீத்தி தன்னுடைய மகனுடன் நேரடியாக எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதேசமயம் அபிஷேக் தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் அங்கு இருந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு அது சண்டையாக மாறிய நிலையில் செருப்பு வீச்சு, தண்ணீர் பாட்டிலால் தாக்குதல், தலைமுடி இழுத்தல் போன்ற அதிர்ச்சிகரமான காட்சிகள் நிகழ்ந்தன.
அங்கிருந்த போலீசாரும் இந்த காட்சிகளை கண்டு சில நொடிகளில் பதறிப் போனார்கள். என்னை கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வைத்த பிறகு கணவர் வேறு ஒருவரை மணந்தது எப்படி நியாயம் என்று முதல் மனைவி கேள்வி எழுப்பினார். அதற்கு இரண்டாவது மனைவி, நான் சட்டப்படி மனைவி, அவரை ஒருபோதும் விட்டு பிரிய மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இருவரையும் மற்றும் அபிஷேக்கையும் கைது செய்து சிவில் லைசன்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
#WATCH | MP: Women Fight Outside SP Office In Jabalpur After Man Goes For Second Marriage Without Divorcing First Wife#MadhyaPradesh #MPNews #Jabalpur pic.twitter.com/iuTSlPrcMp
— Free Press Madhya Pradesh (@FreePressMP) September 2, 2025
