கர்நாடக மாநிலம் அனந்தபுரம் அருகே எடிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா (28). அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் இவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் கருத்து வேறுபாடு காரணத்தினால் சில ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதைத் தொடர்ந்து ரஞ்சிதா தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் கடந்த நாலு மாதத்துக்கு முன்பு ரஞ்சிதா ஆனந்தபுரத்தை சேர்ந்த சசிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக ரஞ்சிதா அவருடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
தற்போது நேற்று முன்தினம் தாய் வீட்டில் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய தாய் உள்புற தா்ப்பால் போட்டிருந்ததை கண்டு சந்தேகம் வந்து ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். தூக்கில் பிணமாக இருந்த மகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி கதறி உள்ளார். இத்தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீட்டின் கதவை உடைத்து ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு காரணம் இதுவரை தெரியவில்லை இரண்டாவது திருமணத்தில் ஏதேனும் தகராறு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வழக்கு பதிவு செய்து போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றன. சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
