ஜப்பானில் உள்ள டோகியோ நகரில் சிறுவர்கள் தொலைபேசி மற்றும் கணினிகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை கட்டுப்படுத்துவதற்காக சட்டம் ஒன்று வந்துள்ளது. இளம் வயதில் உள்ளவர்கள் மற்றும் பெரியவர்கள் இரவு 10 மணிக்கு மேல் கணினி, தொலைபேசி போன்ற சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் அந்நகரில் வாழும் அனைவரும் இந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. உடல்நல பாதிப்பு மற்றும் எதிர்மறையான தாக்கங்கள் அதிகரித்து வருவதால் இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. விடுமுறை நாட்களில் ஸ்மார்ட் போன் பழக்கம் அதிகமாக உள்ளதால் நடத்தை சம்பந்தப்பட்ட பல சிக்கல்கள் வருகின்றன.
ஸ்மார்ட் போனில் செலவிடும் நேரத்தை குடும்பத்தில் செலவு செய்வதற்காகவே. நகரத்தில் உள்ளோர் தொலைபேசியில் நீண்ட நேரம் உபயோகித்ததால் தூக்கமின்மை நோய் வருகிறது. திட்டத்தை கொண்டு வந்ததால் பலரும் சுதந்திரத்தை பறிப்பது போல உள்ளது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். டோயோக் நகரில் 69 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். 6 வயதிலிருந்து 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உள்ள அனைவருமே மொபைல் போன் அதிகம் உபயோகிக்கிறார்கள். திட்டத்தை அறிவித்த பிறகு இந்த நாலு நாட்களில் மட்டும் 83 அழைப்புகள் மற்றும் 44 மின்னஞ்சல்கள் வந்துள்ளது. அவற்றில் 80 சதவீத மக்கள் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்கள்.
