SBI வங்கி வடிக்கையாளரா..? அப்போ உஷாரா இருங்க… “கிளிக் செய்தால் மொத்த பணமும் காலி”… வந்தது எச்சரிக்கை அறிவிப்பு..!!

By Soundarya on புரட்டாதி 3, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போகிறது. இப்படி ஒருபுறம் தொழில்நுட்பம் வளந்துகொண்டே போனாலும் மறுபுறம் சைபர் மோசடிகளும்  அதிகரித்துக்கொண்டே போகிறது. ஏதாவது லிங்கை அனுப்பி வைப்பார்கள். நாம் அதை கிளிக் செய்தும் போது பணம் மொத்தமும் போய்விடும். இதுகுறித்து அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் சார்பாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் உங்களின் YONO கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாக போலியான APP -இன் லிங்கை அனுப்பி வைக்கிறார்கள். அதை கிளிக் செய்தால் பணம் திருடப்படுகிறது. எனவே, SBI வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் internet மொபைல் பேங்கிங் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .