BREAKING: புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை… திக்குமுக்காடி போன நகைப்பிரியர்கள்..!!

By Soundarya on புரட்டாதி 3, 2025

Spread the love

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.78,440க்கும், கிராம் ரூ.9,805க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 640 ரூபாய் உயர்ந்து 78440 ரூபாய்க்கும்,  ஒரு கிராம் ரூ.9805 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 160 ரூபாய் உயர்ந்து 77,800 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 9,725 ரூபாய்க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. நேற்றைவிட இன்று விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.