சமீபகாலமாக, சமூக வலைதளங்களில் மத்திய அரசு லேப்டாப் திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்று செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. இந்த தகவல் போலியானது என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று மத்திய அரசு ஏற்கனவே பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுவுக்கும் பலமுறை எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதுபோன்ற போலியான தகவல்கள் உங்களுடைய மொபைல் போனுக்கு வரும் செய்திகளை நீங்கள் கிளிக் செய்தால் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை மோசடி செய்து திருடி விடுவார்கள். ஆகவே எச்சரிக்காக இருக்குமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டம் உண்மை இல்லை என்றாலும் மாநில அரசுகள் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்தி தான் வருகிறார்கள் அரசு கல்லூரி மாணவர்களுக்கு விலை இல்லா மடிக்கணினி திட்டம் தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம். இது போன்ற இணையதளத்தில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விட்டுள்ளது. இது போன்ற எந்த அதிகாரப்பூர்வ அரசு வலைத்தளயங்களிலும் தகவல்கள் பரவவில்லை என்று உறுதிப்படுத்தி உள்ளது மத்திய அரசு.
