தமிழக முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய 55 வாக்குறுதிகளில், 366 வாக்குறுதிகளை நமது திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ளது. மேலும் இதைப்பற்றி சொன்னால், முதல்வர் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற பல திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்குகிறது.
நாங்கள் சொன்னதையும் செய்திருக்கிறோம், சொல்லாததையும் செய்திருக்கிறோம். மேலும் முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியில், நிதி நிர்வாக சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளை கடந்து, சொன்ன சொல்லை காப்பாற்றினோம்” என்று தெரிவித்தார்.
