“எங்க அம்மா ஒரு சேலை கூட வாங்கிக்கல”… தாயை நினைத்து உணர்ச்சி பொங்க பேசிய பிரதமர் மோடி… கண்ணீர் வடித்த பாஜக தலைவர்…!

By Divyamayakannan on புரட்டாதி 2, 2025

Spread the love

பீகாரில் தேர்தல் ஆணையத்தை எதிர்த்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தர்ப்பங்காவில் நடந்த யாத்திரையின் போது தொண்டர்கள் சில பிரதமர் மோடியைப் பற்றி அவதூறாக பேசினார்கள். அந்த வீடியோ வளையத்தளத்தில் வைரலாகி வந்தது. பீகாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக பேசினார். பெண்கள் என்றாலே பாரம்பரியமாக மரியாதை கொடுக்கும் நாட்டில் பிறந்துள்ளோம். இருப்பினும் சில நாட்களுக்கு முன்பு பீகாரில் நடந்த நிகழ்வை மறக்கவே முடியாது.

ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் என் தாயை மட்டும் இல்லாமல் நமது நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை அவமானப்படுத்தி உள்ளனர். என் மனதில் மட்டுமில்லாமல் பீகார் மக்களிடமும் மனவலி அதிகமாக உள்ளது. என்னுடைய தாயை எந்த ஒரு காரணமும் இன்றி விமர்சனம் செய்தனர். நம் நாட்டிற்கு சேவை செய்வதற்காக என்னை விட்டு என் அம்மா பிரிந்து இருக்கிறார். சில காலத்திற்கு முன்பு 100 வயதை நிறைவு செய்து என்னை விட்டு கடவுளிடம் சென்று விட்டார்.

   

என் தாயை அவமதித்த காங்கிரஸ், ஆர்ஜேடி அதனால் சில தாய்மார்களின் கண்களில் கண்ணீரை என்னால் பார்க்க முடியவில்லை. அவருக்காக ஒரு சேலை கூட வாங்கிக் கொள்ளமாட்டார். ஒவ்வொரு பைசாவையும் சேமித்து வைப்பார் என பிரதமர் மோடி உணர்ச்சி பொங்கி பேசி உள்ளார். அந்த நிகழ்ச்சியில் இருந்த சில பிரதமர் மோடி ஜி பேசியதை கேட்டு   கண்ணீர் சிந்தினர் அதில் பெண்களும் பலர்.