கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மது போதையில் இருந்த மகன் தனது தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள குட்டிச்சல் பகுதியை சேர்ந்த ரவி (65) என்பவருடைய மகன் நிஷாந்த். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனால் தந்தை மற்றும் மகனிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டிற்கு வந்த நிஷாந்த் தகராறு செய்துள்ளார்.
இது தொடர்பாக தந்தை மற்றும் மகன் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த நிஷாத் தன்னுடைய தந்தை ரவியை பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ரபி உடலை கைப்பற்றிய காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நிஷாந்தை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
