தமிழகம் முழுவதும் உள்ள 4829 டாஸ்மார்க் கடைகளுக்கு, தமிழக அரசு விடுமுறை அளித்தது. ஓராண்டுக்கு குறைந்தபட்சம் 8 நாட்கள் ( திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி) டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்.
இந்நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி மிலாது நபியையொட்டி தமிழகம் முழுவதும் இயங்கும் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி கடைகளை நடத்தினால், கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
