வருஷத்துக்கு ரூ.5 லட்சம்… 40% வரை தள்ளுபடி… தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு…!

By Srimathi on புரட்டாதி 1, 2025

Spread the love

தமிழ்நாடு ஸ்டார்ட் அப் டேட்டா வவுச்சர் திட்டம், தொடங்க உள்ளதாக அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அதில் 2025 – 2026 நிதியாண்டில், தமிழ்நாடு ஸ்டார்ட் அப் டேட்டா வவுச்சர் திட்டம் கிளவுட் கட்டமைப்பு செலவுகளை குறைப்பதன் மூலம், ஸ்டார்ட் அப்களை விரைவாக அளவிடவும், எளிதான புதுமைகளை உருவாக்கவும் தொடங்கப்பட உள்ளது. 5 லட்சம் என 3 ஆண்டுகளுக்கு 15 லட்சம் வரை கிளவுட் சேவை தொகை அந்த நிறுவனத்திற்கு திருப்பித் தரப்படும். அமேசான் வெப் சர்வீஸ், மைக்ரோசாப்ட் அஸூர் போன்ற கிளவுட் நிறுவனங்களிடமிருந்து கிளவுட் சேவை தள்ளுபடியில் வழங்கப்படும்.

மொத்த செலவு – 10 கோடி

   

தகுதி – StartUpTN, iTNT Hub மற்றும் ELCOT–STPI FinBlue ஆகியவற்றால்  பரிந்துரைக்கப்பட்ட தொடக்க நிறுவனங்கள். இந்தத் திட்டம் இந்தியாவில் தொடக்க நிறுவனங்களுக்கு, மிகவும் உகந்த தமிழ்நாட்டில் நிலையை வலுப்படுத்துகிறது.