மத்திய மற்றும் மாநில அரசு தமிழ்நாட்டில் பல்வேறு வகையானத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மக்களின் நலனை கருத்தில் கொண்டே ஒவ்வொரு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு இலவச சிகிச்சை கொடுத்து வருகிறது. நிறைய மக்கள் ஆயுஷ்மான் திட்டத்தில் இலவச சிகிச்சை பெற்று வருகிறார்கள் இருப்பினும் சிலர்களிடம் இதுப்போன்ற திட்டம் இருப்பதே தெரியவில்லை .
உங்களிடம் இருக்கும் ஒரே ஒரு ஆவணத்தை வைத்தே ஆயுஷ்மான் அட்டையை சுலபமாக வாங்கிவிடலாம். எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். நீங்கள் 24 மணி நேரத்தில் ஆயுஷ்மான் அட்டையை வாங்க நினைத்தால், அதற்கு முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு தேவைப்படும். பீகார் மற்றும் பல மாநிலங்களில் ஆயுஷ்மான் அட்டையை ரேஷன் கார்டு மூலமாகவே உருவாக்கித் தருகிறார்கள். ஆயுஷ்மான் அட்டையை அதிகாரப்பூர்வ இணையத்தில் அப்ளைச் செய்யலாம்.
https://beneficiary.nha.gov.in என்ற வெப்சைட்டை லாகின் செய்த Beneficiary என்பதை தேர்ந்தெடுத்து மொபைல் எண்ணை பதிவுச் செய்தால் ஓடிபி மற்றும் கேப்ட்சாவை நிரப்பி உள்நுழைந்து PMJY என்றதை தேர்ந்தெடுத்து மாநிலம் மற்றும் மாவட்டத்தை பதிவுச்செய்து ஆதார் எண்ணை நிரப்பினால் ஒரு பட்டியல் திறக்கும் அதில் உங்கள் பெயர் சரிபார்ப்பை முடித்து புகைப்படத்தை பதிவேற்க வேண்டும். பின்பு அதில் கேட்கப்படும் தகவல்களை நிரப்பி சமர்ப்பித்தாள் 24 மணி நேரத்திலேயே ஆயுஷ்மான் அட்டை உங்கள் கையில் வந்துச் சேரும். ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தை பயன்படுத்தி அனைவரும் இலவச சிகிச்சையை பெற்றுக் கொள்ளுங்கள்.
