உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு நீரஜ் என்பவர் உடன் நட்பாக பழகி வந்துள்ளார். பின் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ள நிலையில், நீரஜ் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமும் அனுபவித்துள்ளார். பின் திருமணத்தைப் பற்றி பேசுவதையும் நீரஜ் நிறுத்திவிட்டார். இது குறித்து இளம்பெண் நீரஜிடம் கேட்டபொழுது, நீரஜ் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அப்பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த இளம் பெண், நீரஜ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இளம் பெண் அளித்த புகாரை போலீசார் அலட்சியப்படுத்தியதால், காவல் நிலையத்திற்கு முன் தற்கொலை செய்து கொள்வதாக இளம் பெண் மிரட்டியுள்ளார்.
மேலும் 2 மாதங்களுக்கு பிறகு, நீரஜ் மீது அமைதியை சீர்குலத்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எனினும், பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யாமல், பிரச்சனையை திசை திருப்பும் வகையில் போலீசார் வேறொரு வழக்கு பதிவு செய்ததால், இளம்பெண் விபரீத செயலில் ஈடுபட முடிவு செய்தார். இதன்படி நேற்று முன்தினம் காவல் நிலையத்திற்கு சென்ற இளம்பெண் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற பொழுது, அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்திக் காப்பாற்றினர். பின் அந்த பெண்ணிற்கு சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வழக்கில் சம்பந்தப்பட்ட நீரஜ், ஏற்கனவே அலகாபாத் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
