நடிகர் சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. மதராஸி திரைப்படத்தில் விக்ராந்த், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தாரித்துள்ளது.
இந்த நிலையில் கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, 3 ஆண்டுகளுக்கு பிறகு நானும் அனிருத்தும் இந்த படத்தில் இணைந்து வேலை பார்த்துள்ளோம். கல்லூரி காலத்தில் எனக்கு கிடைத்த நல்ல நண்பர்களால் தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.
கல்லூரி நண்பர்களுடன் இன்றும் இணைந்து பயணித்து வருகிறேன். இந்த படத்தில் காதலை மையமாக வைத்து திரை கதையை தேர்வு செய்து படம் எடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார். பின்னர் படத்தின் ஒரு பாடலுக்கு கல்லூரி மாணவர்களுடன் இணைந்து சிவகார்த்திகேயன் உற்சாகமாக நடனமாடியுள்ளார்.
