என்னதான் காலம் மாறிக் கொண்டிருந்தாலும் அப்போதிலிருந்து இப்போது வரை காதல் மற்றும் கல்யாணம் என வரும்போது அனைவருமே ஜாதியை பார்க்கின்றனர். மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதற்கும் துணிந்து கொலை செய்யும் அளவிற்கு கூட சென்று விடுகிறார்கள். கடந்த சில நாட்களாகவே இப்படி ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி கர்நாடக மாநிலம் கலபிரகி மேலகுந்தா கிராமத்தில் மாற்று சமூக இளைஞரை காதலித்ததால் தந்தை தனது மகளை கொன்று உடலை தீவைத்து எரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நர்சிங் படித்து வந்த கவிதா என்பவர் ஆட்டோ டிரைவரை காதலித்து வந்துள்ளார். பெற்றோர் எதிர்த்தும் காதலை அவர் கைவிடவில்லை. இதனிடையே நேற்று இரவு கவிதாவை தந்தை சங்கர் கழுத்தை நெரித்து கொன்று உடலை வீட்டின் அருகே எரித்துள்ளார். மகள் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
