“சீச்சி…. நண்பரின் மனைவியுடன் மணாலிக்கு ட்ரிப் சென்ற தொழிலதிபர்”… வீடு திரும்பியதும் நடந்த பகீர் சம்பவம்….!

By Srimathi on ஆவணி 29, 2025

Spread the love

டெல்லியை சேர்ந்தவர் வினோத். இவருக்கு திருமணமாகி மேகா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (தொழில் அதிபர்), வினோத்தின் நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறார். இந்த சூழலில் சுரேஷ்குமார் மற்றும் மேகா ஆகியோரிடையே நெருங்கிய நட்பு இருந்திருக்கிறது.

மேலும் சுரேஷ் குமார் மேகாவை மணாலிக்கு அழைத்துச் சென்று, ஓர் இரவு அவருடன் தங்கியதாக தெரிகிறது. இருவரும் டெல்லிக்கு திரும்பிய நிலையில், சுரேஷ் குமாரை சந்தித்த வினோத், அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், சுரேஷ் குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வினோத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.