எடப்பாடி தலையில் பேரிடி… அதிமுக கூட்டணியில் துணை முதல்வர்… பாஜகவின் புது வியூகம்…!

By Nanthini on ஆவணி 28, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டு வருகிறது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதே சமயம் மேடையில் பேசும்போதெல்லாம் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என தொடர்ந்து கூறி வருகின்றார். இதனிடையே அதிமுக மற்றும் பாஜக இடையே ஒரு முரண்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில் நெல்லையில் பேசிய அமித்ஷா, தமிழகத்தில் கூட்டணி அரசு அமையும் என்றார். அதுவே அண்ணாமலை மற்றும் இபிஎஸ்ஐ முதல்வராக உழைக்க வேண்டும் என்றார். இந்த கருத்துக்களின் பின்னணியில் முக்கிய அரசியல் நகர்வு இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள நெருடல்களை பாஜக சரி செய்யும், ஆனால் கூட்டணி அரசுதான் அமைய வேண்டும் என பாஜக திட்டவட்டமாக இபிஎஸ் தரப்பிடம் சொல்லியதாக தகவல்கள் உள்ளன. துணை முதல்வர் பதவியும் பாஜக கேட்பதாக சொல்லப்படுகின்றது.