காலையிலேயே குட் நியூஸ்… தெருவோர வியாபாரிகளுக்கு கடன்… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 28, 2025

Spread the love

இந்தியாவில் தெருவோர கடைக்காரர்களுக்கான PM Svanidhi கடன் திட்டத்தில் வழங்கப்படும் தவணை கடன் 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 2030-ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சராவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல் தவணை கடன் வரம்பு 15,000 ரூபாயாகவும், இரண்டாம் தவணை 25 ஆயிரம் ரூபாயாகவும், மூன்றாம் தவணை ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

உரிய காலத்தில் தவணையை செலுத்தினால் சில சலுகைகளும் அளிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு அரசு வங்கி, அருகிலுள்ள பொது சேவை மையம் (CSC) அல்லது நகராட்சி அலுவலகத்திற்குச் சென்று இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.  PM SVANidhi இன் மொபைல் செயலி அல்லது அதிகாரப்பூர்வ போர்டல் மூலமாகவும் இதற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.  எனவே தெருவோர வியாபாரிகள் இதனை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.