சென்னை திருவொற்றியூரில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு 1 1/2 வயது குழந்தையுடன் ஒரு இளம்பெண் வந்தார். அப்போது திடீரென குழந்தைக்கு வலிப்பு வந்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த சமயம் காவல் ஆய்வாளர் உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனையடுத்து திமுக மண்டல குழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினரான கவி கணேசன் குழந்தையின் நலம் குறித்து விசாரித்து மருத்துவ செலவு ஏற்றுக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
