மண்ணை கிளறிய தெரு நாய்கள்… தோண்டி பார்த்த ஊர் மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… கேவலம், இப்படியுமா பண்ணுவாங்க…?

By Divyamayakannan on ஆவணி 27, 2025

Spread the love

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் வெளிமாநில தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. அங்குள்ள ஒரு பகுதியில் தெருநாய்கள் கூட்டமாக நின்று மண்ணைத் தோன்றியுள்ளது. இதைக் கண்ட சில மக்கள் தெருநாய்கள் இருந்த இடத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். பச்சிளம் குழந்தை உடல் ஒன்று மண்ணுக்குள் தெரிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் வந்த போலீசார் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பெண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் வெளி \மாநில தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த மஜ்ரு ஷேக் (33), ஷீலா கார்த்தூன் (32) என்பவர்களின் குழந்தை என்று தெரியவந்துள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் இப்பகுதிக்கு கூலி வேலைக்காக வந்துள்ளனர். அப்பொழுதே ஷீலா கார்த்தூன் கர்ப்பமாக இருந்துள்ளார்.

   

கடந்த 24ஆம் தேதி வீட்டிலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பின்பு பெண் குழந்தை என்பதால் வழக்க மனமில்லாமல் வீட்டின் முன்னே தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து உள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவன் மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து, ஷீலா கார்த்தூன் உடல்நலக்குறைவால்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் ம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.