அமலான 25% வரி… இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள்..? இதோ முழு விவரம்..!!!

By Divyamayakannan on ஆவணி 27, 2025

Spread the love

உக்ரைனுக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன்பு ரஷியா தொடங்கிய போர் இன்றுவரை முடிவுக்கு வராமல் இருக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. ரஷிய அதிபர் புதினுடன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் பொருளாதாரத்தில் மேலே உள்ளது என்று அமெரிக்கா கூறிவருகிறது. கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிரான நடவடிக்கையில் இந்திய அரசு மீது வரிகளை விதித்து வருகிறது அமெரிக்கா.

இதனால் இந்தியாவில் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக மாற உள்ளது. இந்த நடைமுறை இன்று 27ஆம் தேதி அதிகாலை 12. 01 மணிக்கு நடைமுறைக்கு வந்துள்ளது. ரஷியா, அமெரிக்காவுக்கு விடுபட்ட அச்சுறுத்தல் காரணத்தினால் இந்தியாவுக்கு இதுபோன்ற விதியைக்  கொண்டு வந்துள்ளது அமெரிக்கா. குஜராத்தில் நடந்தப்  பொதுக்கூட்ட ஒன்றில் பிரதமர் மோடி பொருளாதார நெருக்கடி வந்தால் மீண்டும் வலிமையுடன் நாம் எழுவோம் என்று கூறினார். 25 சதவீத கூடுதல் வரியால் இந்தியாவில் என்னென்ன பாதிப்புகள் வரப்போகிறது என்று பார்க்கலாம்.

   

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் 8,730 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை 50 சதவீத வரி விதிக்கப்படும். ஆடைகள், ரத்தினங்கள், நகைகள், கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் மற்றும் தோல் பொருட்கள். இவை அனைத்தும் கடுமையாக பாதிப்புப் போகிறது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் மருந்துகள், மொபைல் போன்கள் ஆகிப்  பொருட்களுக்கு  வரிகள் அதிகரிக்கும்.

   

10 முதல் 25 சதவீத வரிகளைக் கொண்டுள்ள அன்றைய நாடுகளில் ஏற்றுமதி உடன் ஒப்பிடும்போது இந்தியா ஏற்றுமதியாளர்கள் போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான நடுத்தர நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். வேலையில்லாமல் போகலாம் , பணிநீக்கம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். வருகின்ற 2026 ஆம் ஆண்டில் 0.2 சதவீதம் முதல் 1 சதவீத முறை உள்நாட்டு உற்பத்தியும் குறையும் என்று பொருளாதார நிறுவனம் கூறியுள்ளது.