இன்றைய ராசிபலன்: இன்று எடுத்த காரியத்தில் வெற்றி பெறும் 3 ராசிகள்… உங்க ராசி இதுல இருக்கா…?

By Divyamayakannan on ஆவணி 27, 2025

Spread the love

நவகிரகங்களில் நீதிமானான சனி பகவான் தற்போது மீன ராசியில் வக்கிர நிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். நவகிரகங்களின் இளவரசனான புதன் நவம்பரில் வக்ர நிலையிலும் சனி பகவான் வக்கிரம் நிவர்த்தி அடைந்து பயணிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரு கிரகங்களும் எதிரெதிரே திசையில் நகர்வதால் இது போன்ற நிகழ்வு நடக்கும் என்றும், இதனால் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட ம் வரப்போகிறது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும், பல வருடங்களாக நிலுவையில் உள்ள நீதிபதி வழக்குகள் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும், நிறைய பொறுப்புகள் வந்து சேரும், தொழிலதிபராக இருந்தால் நீங்கள் எடுத்து வைக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும், உங்கள் படைப்பிற்கு மற்றும் திறமைக்கு பலன் கிடைக்கும், பணியிடங்களில் அனைவரும் உங்களை பாராட்டுவார்கள்.

   

ரிஷபம்: ரிஷப ராசிக்கார நேயர்களே: கூட்டு தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும், புதிதாக ஏதேனும் தொழில் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும், உங்கள் பேச்சாற்றலினால் சாதிப்பீர்கள், புதிதாக வருமானம் வந்து சேரும், ஊடகத்துறையில் இருப்பவர்கள் தொழில் சிறப்பாக இருக்கும், முதலீடு செய்வோருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

   

கும்பம்: கும்ப ராசிக்கார நேயர்களுக்கு நிதியில் முன்னேற்றம் ஏற்படும், வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், புதிதாக வீடு , வாகனம் வாங்க முயற்சி செய்து கொண்டிருப்போர்க்கு வாய்ப்பு அதிகம், பணிபுரிவோருக்கு விரும்பிய இடத்திற்கே டிரான்ஸ்பர் கிடைக்கும், ரியல் எஸ்டேட் செய்து கொண்டு இருப்பவருக்கு வருமானம் அதிகரிக்கும்.