குட்காவுக்கு அடிமையான பெண்… பணம் தராத கணவர்… அடுத்து நடந்த குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!.

By Divyamayakannan on ஆவணி 26, 2025

Spread the love

உத்திர பிரதேச மாநிலம் சித்ரகூட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடலுக்கு கேடு விளைவிக்கும் குட்கா பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். கணவன் எவ்வளவோ சொல்லியும் கேட்காத பெண். இந்த பழக்கத்தினால் அந்த பெண்ணிற்கும் அவருடைய கணவிருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. சமீபத்தில் குட்கா வாங்குவதற்காக கணவன் பணம் தரமறுத்துள்ளார், அதனால் சண்டை வந்துள்ளது.

குழந்தைகளுக்கு முன்னால் குட்கா சாப்பிடுவதை நிறுத்துமாறு கணவன் கண்டித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு அவரும் விஷம் அருந்தியுள்ளார். ஆபத்து நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.