சென்னையில் காதலன் கண்முன்னே மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வேப்பேரி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தர்ஷன் (26). இவருடன் ஹர்ஷிதா என்ற பெண் சமூக வலைதளம் மூலம் பழகியுள்ளார்.
நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. பிறகு பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முதிர்ந்துள்ளது. நவம்பரில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. கல்யாணத்திற்கு பின்னர் தனிக்குடித்தனம் போக வேண்டும் எனக் கூறியதை காதலன் தர்ஷன் ஏற்காததால் கடந்த சனிக்கிழமை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார் ஹர்ஷிதா.
