தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிக்கையில்,
“தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனைத்துச் செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்களும் மத்திய சுற்றுசூழல், வனம் & பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் அறிவிக்கை GSR 844 (E) நாள்: 06.09.2018, பிராணிகள் வதை தடுப்பு விதிகள் 2018-ன் படியும், தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனைத்து நாயின இனப்பெருக்கம் & விற்பனை நிலையங்களும் மத்திய சுற்றுசூழல் வனம் & பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் அறிவிக்கை GSR 496 (E) நாள்: 23.05.2017, பிராணிகள் வதை தடுப்பு சட்டப்படி 2017-ன் படியும், தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்திடம் பதிவுசெய்ய வேண்டும் என 12.09.2020 அன்று பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி ஒரு சில செல்ல பிராணிகள் விற்பனை நிலையம், நாய் இனப்பெருக்கம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் போன்றன தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்யாமல் நிறுவனம் நடத்துபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில், விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து 30/09/2025 க்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 1/10/2025 க்கு மேல் பதிவு செய்யாமல் நடத்தப்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களை அறிய https://tnawb.tn.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்”
என தெரிவித்துள்ளார்.
