விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலின் ஹீரோயினாக நடித்து வருபவர் ஸ்வேதா. இந்த சீரியலில் தமிழ்ச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது. தற்போது தன்னந்தனி ஆளாக நின்று டாக்டருக்கு படித்து வரும் தமிழ்ச்செல்வியின் தைரியம் பல பெண்களுக்கு ஊந்துகோலாக அமைந்துள்ளது.

இதனிடையே நேற்று ஆதி என்பவர் சுவேதாவின் காதலன் என்று வலைத்தள சேனல் ஒன்றுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார். பின்பு இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை ஸ்வேதாவின் கணவன் என்று பதிவிட்டு இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் நடிகை ஸ்வேதா கோபத்தின் உச்சிக்குச் சென்றதால் சமூக வலைத்தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம், எனது கணவன் இல்லை மற்றும் காதலரும் கிடையாது. தற்போது பொய்யான தகவலை பரப்பி, என் வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறார். பொய்யாக பரப்பிய தகவலுக்காக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று ஸ்வேதா வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
