அடக்கடவுளே!.. துணிக்கடையில் டிரஸ் மாற்றிய 20 வயது கல்லூரி மாணவி… நொடி பொழுதில் நடந்த பயங்கர சம்பவம்..!

By Divyamayakannan on ஆவணி 25, 2025

Spread the love

பிரேசிலின் குவாரா நகரில் உள்ள பார்க் ஷாப்பிங்கில் ஜாரா என்னும் துணிக்கடைவுள்ளது. கட்டிடக்கலை மாணவி அலிசியா ஸ்பைஸ் (20) என்ற பெண் ஜாரா துணிக்கடைக்குச் சென்றுள்ளார். பின்பு ட்ரெஸ்ஸிங் அறைக்கு துணி அணிந்துப்  பார்ப்பதற்காக போய்வுள்ளார். ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து அலிசியா காலில் தேள் ஒன்று கொட்டியுள்ளது. அதன் பேரில் மயங்கி விழுந்த அலிசியாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் நடந்தவுடன் கடை ஊழியர்கள் அப்பெண்ணிற்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர் .

ஆகையால் இப்போது பெண் குணமடைந்து மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார். இச்சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. ஷாப்பிங் மாலில் இது போன்ற சம்பவம் நடந்ததால் வாடிக்கையாளர்கள் பல கேள்விகளை எழுப்பி உள்ளனர். சமூக வலைத்தளத்தில் வெளியானதால் ஜாரா நிறுவனம் இச்சம்பவத்தை பற்றிப்  பதிவு ஒன்று வெளியிட்டுள்ளனர். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாதபடி பார்த்துக் கொள்கிறோம் . இச்சம்பவத்திற்கு தாழ்மையுடன் மன்னிப்பு கேட்கிறோம் என்று பதிவு வெளியிட்டுள்ளனர்.