பாஜகவில் இருந்து விலகல்… கூட்டணியை மாற்றும் அதிமுக?… பரபரப்பை கிளப்பிய பிரபலம்…!

By Nanthini on ஆவணி 25, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு மீண்டும் திமுக ஆட்சியை நிலைநாட்டி விடலாம் என்று செயல்பட்டு வருகிறார். மறுபக்கம் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் இந்த முறை அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளார். இருந்தாலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால் முக்கிய புள்ளிகள் பலரும் மாற்று கட்சிகள் இணைந்து வருகின்றன.

இந்நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும் என்ற திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பாஜகவால் அதிமுகவுக்கு ஆபத்து என நாங்கள் சொன்னபோது விழுந்து புரண்டிய கட்சியினர், தற்போது அதே கருத்தை விஜய் கூறும் போது அமைதியாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் இருக்க ஒரே வழி, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது தான், இல்லையென்றால் அதிமுகவை காப்பாற்ற முடியாது என திருமாவளவன் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.