கிரீன் டீயில், ஏராளமானஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், அதை அருந்துவதன் மூலம் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதில் குறிப்பாக EGCG (Epigallocatechin Gallate) எனப்படும் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. கிரீன் டீயில் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகள் கொண்டவர்கள், கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
க்ரீன் டீயைத் தவிர்க்க வேண்டியவர்கள்:
- எரிச்சல் கொண்ட குடல் நோய்(Irritable Bowel Syndrome – IBS), அடிக்கடி வயிற்றுப்போக்கு போன்ற குடல் சார்ந்த பிரச்சினை உடையவர்கள், கிரீன் டீ குடிப்பதை தவிர்க்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும்.
- க்ரீன் டீயில் அதிக அளவில் காஃபின் (Caffeine), குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை தூண்டி, புரதம் & கொழுப்பு உறிஞ்சும் திறனை குறைத்துவிடும் என்பதால், குழந்தைகளுக்கு கிரீன் டீ கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
- காஃபின் அலர்ஜி / உணர்திறன் கொண்டவர்கள் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்காவிட்டால், இதய துடிப்பு அதிகரித்து, உடல் சோர்வு, எரிச்சல் உணர்வு மற்றும் உடல் நடுக்கத்தை உண்டாக்கிவிடும்.
- இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் / ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், கிரீன் டீயை குடிக்கும் பொழுது, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை குறைக்கிறது.
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் & கர்ப்பிணி பெண்கள் கிரீன் டீ குடித்தால், அதில் உள்ள அதிகப்படியான காஃபின் காரணமாக கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது/குழந்தையின் வளர்ச்சியில் இடையூறு ஏற்படலாம்.
- கிரீன் டீயில் இயற்கையாகவே “டானின்கள்” (Tannins) என்னும் சேர்மம் உள்ளதால், அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் கிரீன் டீ குடித்தால், வயிற்றின் அமில உற்பத்தியை மேலும் அதிகரித்து, வயிற்று உப்புசம், வயிற்று அசவுகரியம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
